சுப காரியங்களில் இருந்து அவ காரியங்கள் வரைக்கும் மஞ்சள் என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், சுப நிகழ்ச்சிகளிலும் மஞ்சளை பயன்படுத்துவார்கள் அவ நிகழ்ச்சிகளிலும் மஞ்சளை பயன்படுத்துவார்கள். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் கொரோனா காலங்களில் குளிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு குளிக்குமாறு பல நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏனென்றால் மஞ்சள் நம் உடலில் ஆன்டிபயாட்டிக்காக செயல்படுகிறது. இருப்பினும் மஞ்சளை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவில் மஞ்சள் அதிகமாக சேர்ப்பதனால் வயிற்று வலி ஏற்படும் என்றும் நெஞ்செரிச்சல் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றும் மஞ்சள் ஒரு ஆன்டி கோகுலன் ஏஜென்டாக செயல்படுவதனால் ரத்தப்போக்கு பிரச்சனைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மஞ்சளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.