
நாட்டில் அனைவரும் மதுபானங்களை ஒழித்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், தர்மபுரி உள்ள மக்கள் மதுபானக் கடைகள் கேட்டு போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டம் பற்றி சோசியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் அனைவரும் விமர்சனத்தை கூறி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களில் உள்ள மக்கள் அந்த பகுதியில் மதுபானக் கடைகள் இல்லாததால் 20 கி.மீ தொலைவிற்கு சென்று மதுபானம் வாங்க வேண்டி இருக்கிறது என்று புகார் தெரிவித்துள்ளார். அதனால் தங்கள் ஊர்களில் மதுபானக்கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று நலப்புரம்பட்டி, கெட்டூர், பழஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாம்பட்டி பகுதியில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.