களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிக்பாஸுக்கு பிறகும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மது அருந்தும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது” எனக் குறிப்பிட்டுள்ளார். என்னதான் தைரியமான நடிகையாக இருந்தாலும் ஓபனாக இப்படியா..? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.