
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் கணவர் ஓட்டம்..
பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான விபின் குப்தா கடந்த 4 தேதி மாயமானார், தனது கணவரை காணவில்லை என்று தெரிந்து மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரின் பெயரில் போலீசார்கள் விசாரணை மேற்கொண்ட போது நொய்டாவில் இருந்த விபீனை கண்டுபிடித்து போலீசார் பெங்களூருக்கு அழைத்து வந்தனர், விபின் குப்தாவை விசாரித்த போது மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் நான் வீட்டை விட்டு ஓடி விட்டேன் என்று கூறியுள்ளார், இதனால் காவல் நிலையத்தில் சற்று ஆச்சரியமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது மேலும் காவலர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்..!!