இன்றைய சூழலில் காரணம் இன்றியோ காரணம் கொண்டோ மனம் அழுத்துவது ஏற்படுவது வழக்கமாகிவிட்டது, இப்படி இருக்கும் பட்சத்தில் மன அழுத்தத்தின்போது சில வகையான உணவு முறைகளை தவிர்ப்பது உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது நொறுக்கு தீனியோ அல்லது அதிக சுவை உள்ள தின்பண்டங்களையோ உண்பது கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் கீத கொழுப்பு சத்துக்கள் உள்ள இந்த தின்பண்டங்கள் சாதாரண நேரங்களில் தீங்கு தருபவை, மன அழுத்தத்தில் இருக்கும் போது உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் குறைந்து உடலை ஆரோக்கியமற்றதாக மாற்றும் அச்சமயத்தில் தின்பண்டங்கள் சாப்பிடும் பொழுது உடல் எடை மற்றும் தேவையற்ற கொழுப்பு மற்றும் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!