திப்பிலி என்பது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இருமல், வாயு, தொல்லை முப்பிணி ஆகியவற்றை நீங்க திப்பிலி பொடி பசும்பாலில் கலந்து காய்ச்சி அருந்த வேண்டும்.
- திப்பிலி பொடியை வெல்லம் கலந்து சாப்பிடுவதால் விந்தணு பெறுகிறது.
- நெய்யுடன் கலந்து சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கின்றது.
- திப்பிலியை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிடுவதால் தொண்டைப்புண், இருமல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமடைகிறது. மேலும் இரைப்பை, கல்லீரல் போன்றவை வலுப்பெறுகிறது.
- திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து மூன்று வேலை சாப்பிட்டு வருவதால் வயிற்று வலி ,வயிற்றுப் பொருமல். நீர் கோர்வை போன்றவை குணமடைகிறது.
- திப்பிலியை எடுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் கபம் ,வாயு தொல்லை நீங்கும், செரிமான பிரச்சனை குணமடைந்து மலச்சிக்கல் வராது.
- திப்பிலி கரிசலாங்கண்ணி இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை குடித்து வர உடல் களைப்பு நீங்கி ஆரோக்கியம் சுறுசுறுப்பு ஏற்படும்.
- திப்பிலி, தேற்றான் விதை சேர்த்து பொடி செய்து கழுநீரில் போட்டு ஏழு நாட்கள் காலையில் குடித்து வந்தால் வெள்ளை பெரும்பாடு நீங்கும்.
- திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சம அளவு எடுத்து தேன் கலந்து நன்கு பிசைந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குணமடையும்.