மறுமணம் பாவமல்ல..!!! மறுமணம் என்பது தவறல்ல என்பதை உணர்த்த வைக்கும் பதிவு..!!

மறுமணம் பாவமல்ல..!!!
மறுமணம் என்பது தவறல்ல,
மாற்றான் கை பட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல…

காமத்தில் மட்டும் தான்
ஆண்களின் பங்கு,
பெண்கள் காலமும் செய்ய
இங்கு ஆயிரம் உண்டு…

பெண்மை என்ற சொல்
உடல் சார்ந்த ஒன்றல்ல,
உள்ளன்பு உயிர் தியாகம்
இவை இன்றி வேறில்லை…

மகர் கொடுத்து பெண்ணெடுத்து
மாடு போல நடத்துபவனை
மிதித்து மீண்டு வந்தால் பாவமில்லை…

பெண்கள் கட்டிலினை அலங்கரிக்கும்
பொருளுமில்லை, காமத்தில் விளையாடும் பொம்மையும் இல்லை…

சமுதாயம் தூற்றும் என அஞ்சிக்கொண்டு சாகும் வரை
உரிமை இழக்க பெண்கள் ஒன்றும்
அடிமை இல்லை…

உள்ளத்தின் உணர்ச்சிகளை
புரியாமல் வெறும் உடல் தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு,
பண்பாடு கலாச்சாரம்
என்று சொல்லிக்கொண்டும்
பெண்கள் படும் பாடை
சரி செய்யா சமுதாயமே…!

வந்து உண்டு விட்டு சென்று விடுவீர்,
வாழ்க்கை வீணாய் போய் விட்டால்
நீரா தருவீர்?

முதல் வாழ்க்கை முறிதல்
பாவமுமில்லை,
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை…

மனம் பார்த்து மணம்
கொள்பவன் ஆண்களின் கூட்டம், மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்…

எந்த வயதிலும்,
எந்த நிலையிலும்
நிம்மதியான வாழ்க்கையை வாழ நினைப்பதும் வாழ்வதும் குற்றமல்ல..!

இந்த பிறவியில் இப்போது வாழவில்லை என்றால்,
இனி எப்போதும் வாழ முடியாது…

தேற்றாவிடியிலும் பரவாயில்லை
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்
அவர்களின் வாழ்வை அவர்கள்
வாழ்ந்து விட்டு போகட்டும்..

Read Previous

மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சி செய்வதே..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

இந்த ஆன்மீக குறிப்புகளை எல்லாம் கண்டிப்பாக பின்பற்றங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular