இந்தியாவில் மத்திய அரசு சார்பில் மக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். இது உத்திரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் 60 வயதிற்கு பிறகு நிலையான வருமானம் பெற முடியும். குறைந்தபட்சம் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை உத்திரவாத ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒருவேளை கணக்கு தொடங்கியவர் உயிரிழந்து விட்டால் நாம் இன்றைக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இதில் 18 முதல் 40 வயது வரை உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலகத்தில் அல்லது வங்கிகளுக்கு நேரில் சென்று இந்த திட்டத்திற்கான கணக்கை தொடங்கலாம். 42 வருடங்கள் மாதம் தோறும் நீங்கள் 42 ரூபாய் செலுத்த வேண்டும்.
அப்படி உங்களால் செலுத்த முடியவில்லை என்றால் காலாண்டுக்கு ஒரு முறை 125 ரூபாய், அரையாண்டுக்கு ஒருமுறை 248 ரூபாய் செலுத்தினால் உங்களுடைய முதிர்வு காலத்தில் அதாவது 60 வயதில் இருந்து நீங்கள் ஆயிரம் ரூபாய் பெறலாம். நீங்கள் செலுத்தக்கூடிய தொகையைப் பொறுத்து பென்ஷன் தொகையும் மாறுபடும். இந்தத் திட்டத்தில் ஆன்லைனில் இ கேஒய்சி மூலமாக இணையும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்துவிட்டால் நாமினிக்கு பென்ஷன் தொகை கிடைக்கும். ஒருவேளை நாமினியும் இறந்து விட்டால் அவர்களின் வாரிசுக்கு பென்ஷன் கிடைக்கும்.