ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு போட்டியாக டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனர் படத்தை இயக்குவதாக இருந்தது.
பிறகு விக்ரமின் கோப்ரா திரைப்படம் படுதோல்வியை தழுவியதால் எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்று நினைத்த அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி 2 திரைப்படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடித்த நிலையில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
அதே சமயம் பிக் பாஸ் மூலம் பிரபலமான அர்ச்சனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் டிமாண்டி காலனி 2 மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.