
கடந்த சில நாட்களாகவே அதாவது குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நாளிலிருந்தே படிப்படியாக குறைந்து விற்பனை செய்து வந்த தங்க விலை திடீரென ஆடிப்பெருக்கை முன்னிட்டு உயர்ந்து நகை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆடிப்பெருக்கு நாட்களில் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு இது ஒரு பெரும் ஏமாற்றமாக இருந்தது .அதனை தொடர்ந்து ஆடிப்பெருக்கு முடிந்தும் விலை சற்று உயர்ந்துள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்:
அதாவது சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 51,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 160 ரூபாய் உயர்ந்து 1 சவரன் 51,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து 6,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை குறைப்பது போல் குறைத்துவிட்டு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக மக்கள் குற்றம்சாற்றுகின்றனர்.