மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் புகார் மீது விரைவான விசாரணை எடுக்க வேண்டும் என்பதற்காக SMS வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் நம்பரை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த இணைப்புக்குரிய அலுவலக பொறியாளரின் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்படும். இதனால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.