
முட்டை பிரியர்கள் கவனத்திற்கு..!! முட்டை பிரியர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டும்..!!
முட்டை என்பது ஒரு ஆரோக்கியமான உணவுதான். தினமும் ஒரு மூட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் தினமும் அதிக அளவு முட்டை சாப்பிடுபவர்களுக்கு பக்க விளைவுகள் வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முட்டை பிரியர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டும்.
தினமும் அதிகமான அளவு முட்டை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு நாம் ஆளாவோம். அதுமட்டுமின்றி, பயோட்டின் குறைபாடும் கூட ஏற்படலாம். தினமும் அதிகமான அளவு முட்டை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம் வாயு தொல்லை உப்புச்சத்து போன்ற நோய்கள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு எந்த வகையான உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிட்டால் அது உடலுக்கு நன்மை தரும் அதிகமாக சாப்பிட்டால் அது உடலுக்கு கெடுதல் ஆகும். இதை அறிந்து எந்த உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிடுங்கள்.