தஞ்சை மாவட்டம் ஆயுதப்படைப்பின் சுபப்பிரியா கடந்த 21ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார், அவருக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
கடந்த 21-ஆம் தேதி சுபப்பிரியா பணியில் இருந்த போது சாலையில் விபத்து ஏற்பட்டு தலையில் காயமடைந்துள்ளார், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் காவல் துறை மற்றும் அவரின் குடும்பத்தினுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சுப பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 25 லட்சம் வழங்க இருப்பதாக மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!!