நாம் எப்போதும் தோசை இட்லி என சாப்பிட்டு சலித்து போய் இருப்போம். இன்று நம் உடம்பில் இருக்கும் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரையை வைத்து அடை எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – ஒரு ஆழாக்கு,
கடலை பருப்பு – ஒரு ஆழாக்கு,
துவரம் பருப்பு – கால் ஆழாக்கு,
உளுந்து – 5 ஸ்பூன்,
மிளகாய் காய்ந்தது – 5,
பூண்டு – 5 பற்கள்,
முருங்கை கீரை – 2 கட்டு,
சின்ன வெங்காயம் – 15.
செய்முறை:
இட்லி அரிசி கடலைப்பருப்பு துவரம் பருப்பு, உளுந்து காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் அரிசி பருப்பு கலவையை போட்டு ஒரு கட்டி பூண்டு உரித்து போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடான பிறகு கடுகு உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து காய்ந்த மிளகாய் உடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவும். முருங்கைக் கீரையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்து நாம் வதக்கிய முருங்கைக்கீரை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு வந்த பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பிறகு எண்ணெய் ஊற்றி மாவை தோசை போல பரப்பி வேக விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை அடை தயார்.




