தமிழகத்தில் மக்களுக்காக மக்களின் ஆரோக்கியத்திற்காக பல மருத்துவ காப்பீடு திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசும் தமிழக அரசும், அப்படி இருக்கும் பட்சத்தில் முதியோர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இக்காப்பீடு திட்டத்தில் 5 லட்சம் வரை முதியவர்கள் பயன்பெறலாம் என்றும் கூறியுள்ளது…
70 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இத்திட்டத்தின் மூலம் மூத்த குடிகள் ஆண்டிற்கு 5 லட்சம் விகிதத்தில் தங்களது உடலை பரிசோதித்துக் கொள்ளலாம் மேலும் அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது, இதற்கு தகுதியான மூத்த குடிகள் அருகில் உள்ள இ சேவை எங்களுக்கு சென்று இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது, இத்திட்டத்தில் இணைந்த பிறகு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு 5 லட்சம் காப்பீடாக அட்டை மூலம் வழங்கப்படும், மேலும் ஆதார் கார்ட் ரேஷன் கார்டு முகவரி சான்றுகள் கொண்டு அருகிலுள்ள இ சேவை மீட்டருக்கு சென்று இதற்கான விண்ணப்பித்தினை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்..!!




