மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக இருக்கும் Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள் :
- Chobdar – 12 பணியிடங்கள்
- Office Assistant – 137 பணியிடங்கள்
- Residential Assistant – 87 பணியிடங்கள்
- Room Boy – 4 பணியிடங்கள்
- Sweeper – 73 பணியிடங்கள்
- Gardener – 24 பணியிடங்கள்
- Waterman – 2 பணியிடங்கள்
- Sanitary Worker – 49 பணியிடங்கள்
- Watchman – 4 பணியிடங்கள்
கல்வி தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 18.
ஊதிய விவரம்:
Pay Level 1 ரூ.15,700/- முதல் ரூ.58,100/- ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




