தமிழகத்தில் கஞ்சா குட்கா விற்போர்களை யோசிக்காமல் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் டிஜிபி குழு அறிவித்துள்ளது…
தமிழகத்தில் கஞ்சா குட்கா விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார், கோவை சரக்கத்திற்கு உட்பட்ட கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியுடன் அவர் ஆலோசனை நடத்தினர் அப்போது குற்றங்கள் தடுப்பது பாதிக்கப்பட்டுருக்கு நிவாரணம் வழங்குவது கடத்தல் ஈடுபட்டு வருபவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் அறிவுரைகள் வழங்கினார், மேலும் கஞ்சா, குட்கா மது போதைகளை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்கள் மற்றும் திருட்டு செயலில் ஈடுபட்டு வரும் திருடர்களை எந்த யோசனைகளும் இல்லாமல் உடனே கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார், மேலும் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார், இந்த மாற்றம் மக்களிடையே பெரும் முற்போக்கு சிந்தனை தரும் என்றும் கூறியுள்ளார்..!!