ரயில் தண்டவாளத்தில் சிறுவனை கட்டி வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

பீகார் மாநிலத்தில் சிறுவன் ஒருவனை சிலர் கட்டி வைத்து தண்டவாளத்தில் படுக்க வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா இங்கிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெகுசரா என்ற பகுதி ஒன்று உள்ளது. இங்கு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் கட்டி வைத்து தண்டவாளத்தில் படுக்க வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு மேற்கொண்டு விசாரணை செய்து வந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும் போது இந்த சிறுவனை இவ்வளவு கொடூரமாக துன்புறுத்தியது அதே பகுதியைச் சேர்ந்த கபில் குமார் ஜெயராம் சவுத்ரி மற்றும் ரோஷன் குமார் என்பது தெரியவந்தது இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை கைது செய்து விசாரிக்கையில் குற்றவாளிகள் அந்த சிறுவன் மீது அவன் ஒரு கடையில் சில பொருட்களை திருடியதாகவும் அதற்காகத்தான் அவனை நாங்கள் இப்படி துன்புறுத்தினோம் எனவும் கூறியுள்ளனர். இருப்பினும், குற்றவாளிகள் சொன்ன காரணத்தை சிறுவனின் தந்தை மறுத்தார். மேலும் தன் மகனை அவர்கள் வேண்டுமென்று கட்டி வைத்து துன்புறுத்தியதாக வேதனையுடன் காவல் துறையிடம் கூறியுள்ளார்.

Read Previous

உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?..

Read Next

உங்களை தீமைகளிலிருந்து பாதுகாக்கும் இரும்பு கவசமாக விளங்கும் விபூதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular