
ராசிபுரத்தில் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையமானது போக்குவரத்து நெரிசல் காரணமாக வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்பட உள்ள நிலையில் அதனை மீண்டும் மீட்டெடுக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்டெடுப்பு போராட்டத்திற்காக கலந்து ஆலோசித்தனர்..
ராசிபுரம் தனியார் மண்டபத்தில் ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் ராசிபுரம் பேருந்து நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் இதில் முக்கிய தீர்மானங்கள் அறிவித்துள்ளனர், இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 3,4 தேதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் நேரில் சந்திப்பதாகவும் மேலும் அடுத்த கட்ட போராட்டத்திற்காக கலந்து ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்..!!