ரேஷன் முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் அனிசூர் ரஹ்மான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு 24 பரனாலா மாவட்டத்தின் தொகுதித் தலைவர் அனிசூர் ரஹ்மான் மற்றும் அவரது சகோதரரிடம் வியாழக்கிழமை கொல்கத்தா அலுவலகத்தில் சுமார் 14 மணி நேரம் ED விசாரணை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று ED தெரிவித்துள்ளது.