ரோஹித் ஷர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2015 டிசம்பர் மாதம் அவர் ரித்திகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு பிறந்த அழகான பெண் குழந்தைக்கு சமைரா என பெயர் சூட்டப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரோஹித்-ரித்திகா ஜோடிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.