வயநாட்டில் இந்த சோகக் காட்சிகளை காணும் போது என் மனம் மிகவும் வலிக்கிறது என்றும் இந்த கடினமான நேரத்தில் நானும் பிரியங்காவும் வயநாடு மக்களுடன் துணையாக நிற்போம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வயநாடு விவகாரம்:
வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஐ கடந்துள்ளது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாதிப்படைந்த பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் வயநாட்டில் இந்த சோகக் காட்சிகளைக் காணும் போது என் மனம் மிகவும் வலிக்கிறது என்றும் இந்த கடினமான நேரத்தில் நானும் பிரியங்காவும் வயநாடு மக்களுடன் துணையாக நிற்போம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிடைக்கப்பெறுவதைப் உறுதி செய்வோம் என்றும் வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு விரைவில் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.