வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களை வெறும் கையோடு அனுப்ப கூடாது. அம்பிகை, பெண்களில் ஒருவராக வந்து தாம்பூல பொருட்களை பெற்று செல்வாள். வீட்டில் பூஜை செய்த பின்பு, மற்ற வீட்டிற்கு சென்று தாம்பூலம் வாங்க கூடாது. பூஜை செய்வதற்கு முன்பே வாங்கலாம். கலசத்தில் பச்சரியை தவிர வேறு அரிசிகள் இடக் கூடாது. வீட்டில் இறைச்சி சமைத்தல் கூடாது. அமங்கல வார்த்தைகள் பேசக் கூடாது. கலசத்தில் இட்ட அரிசியை பூஜை முடிந்து பிரசாதமாக்கி சாப்பிடலாம். தூக்கி எறிதல் கூடாது.