கல்வி கற்பதற்கு வறுமை தடை அல்ல என்று பலரும் நிரூபித்து வந்து கொண்டிருக்கும் காலத்தில் தற்போது மூன்று மாணவர்கள் வறுமையிலிருந்தும் வறுமை தடையில்லை என்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர்..
தர்மபுரி அருகே மிக எளிமையான குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சடைந்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார், தர்மபுரி அருகே தண்டகரன்பட்டியை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் மாதம்மாள் தாயாரின் மூன்று பிள்ளைகள் நீட் தேர்வின் தேர்ச்சி பெற்றுள்ளனர், சந்தியா, ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ், மூவரும் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர்கள் ஆக வேண்டுமென்ற ஆசை உள்ளது ஆனால் நீட் பயிற்சி பெறுவதற்கான பண வசதிகள் இல்லாத காரணத்தால் ஸ்மார்ட் போனில் உள்ள யூடியூப் மூலம் நீட் தேர்விற்கான செய்திகளை சேகரித்து அதன் மூலம் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இவர்களை வாழ்த்து நேரத்தில் பலரும் இவர்களுக்கு உதவுவதற்காக முன்னுறுகின்றனர்..!!