வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஒடிசாவில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் ஒருவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படாததால் அந்தப் பெண் தனக்கு மகபேறு விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டுமென ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்து உள்ளார்.

இந்த மனு நீதிபதி சஞ்சீவ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி “ஒடிசா சேவை குறியீடு விதி 194 கீழ் ஒரு பெண் ஊழிய 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை பெற உரிமை உண்டு. ஒரு வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு இத்தகைய சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வாடகை தாய் மூலம் தாய்மை அடையும் பெண்களுக்கு இது போன்ற சலுகைகள் குறிப்பிடப்படவில்லை”, என தெரிவித்தார் .

மேலும் ராஜஸ்தான் ஹை கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி “வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குள் சமமான சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு தாயின் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது, ஆகவே மனுதாரருக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிட்ட நீதிபதி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை வழங்குவதற்கான சலுகைகளை உருவாக்கவும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Read Previous

இனிப்பு ஊறுகாய் கேள்விப்பட்டது உண்டா?.. ஈஸியா செய்யலாம் வாங்க..!!

Read Next

ஆண்களின் ஆண்மை குறைவை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular