
1. வாரம் ஒரு முறை புதன்கிழமை அன்று மீன்களுக்கு வேர்க்கடலை கொடுத்து வாருங்கள். நமக்கு வர வேண்டிய தொகை தடையின்றி வரும். கடன் தொல்லை குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் காணப்படும்.
2. தடைபெற்று வரும் திருமணங்களுக்கும், வம்ச விருத்திக்கும் வியாழன் அன்று கன்றுடன் கூடிய பசுவுக்கு… உப்பு போடாமல் தயிர்சாதம் செய்து கொடுத்து வாருங்கள். அனைத்து சுபக்காரியங்களும் தடையின்றி நடைபெறும். நமது முன்னோர்களின் ஆன்மாவும் சாந்தியடையும்.
3. நமது முன்னோர்களின் சாபம் நீங்க கன்றுடன் கூடிய பசுவுக்கு இரண்டு கட்டு அகத்தியக்கீரையை வியாழன் அன்று கொடுத்து வாருங்கள் முன்னோர்களின் சாபம் நீங்கி, கர்ம வினைகள் குறையும்.
4. சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மௌனமாக இருங்கள். அனைத்து கஷ்டங்களும் படிப்படியாக குறையும்.