விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமா ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது உதயநிதி பேசியது “ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து தமிழக முதல்வர் செய்து வருகின்றார். தேர்தல் அறிக்கையில் கூறியது போல பெட்ரோல், பால் விலையை குறைத்துள்ளார். பெண்களுக்கான விடியல் பயண திட்டத்தில் 500 கோடி பேர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மட்டும் விடியல் பயணத்தில் எட்டு கோடி பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டத்தால் பலரும் பயன் அடைந்து வருகின்றனர், 31,000 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
ரூ.1.16 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகின்றது. விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப் பின்னும் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டியில் பாலம், சாலை ஆகிய அனைத்து பணிகளும் விரைவாக கட்டி முடிக்கப்படும், நந்தன் கால்வாய் திட்ட பணிகள் 75% நிறைவடைந்து உள்ளது, விக்கிரவாண்டியில் புதிதாக ரூ 75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது, அன்னியூர் சிவாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்”, என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.