ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக தள்ளிவைப்பட்டது. இந்நிலையில். டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. H2A வகை ராக்கெட் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. H2A ராக்கெட்டை விட 1.3 மடங்கு அதிகமான சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது H3 ராக்கெட் என்பது குறிப்பிடத்தகது.