மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைக்கப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் விலையை 3-4 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் ஐபோன் ப்ரோ மாடலின் விலை ரூ.5,100ம், ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ.6 ஆயிரமும் குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13, 14 மற்றும் 15 மாடல்களின் விலை ரூ.3 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபோன் எஸ்இ-யின் விலை ரூ.2300 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த சமீபத்திய விலைகளை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.