கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை விடுத்து, அடுத்தவர் எப்படி முன்னேறினார் என்பதை பார்ப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவிடுகிறார்.
இதனால் அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த நபர் மீது கண் திருஷ்டியாக விழுகிறது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்கள் மூலம் ஒருவர் மீதோ அல்லது ஒரு குடும்பத்தின் மீதோ கண் திருஷ்டி ஏற்படுகிறது.
இதனால் கண்பட்டவருக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை எம்மை நோக்கி ஈர்க்க செய்வதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டி பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் 7 பேருக்கு கருப்பு துணி வாங்கி கொடுக்கலாம் இது உங்கள் மேல் இருக்கும் கண் திருஷ்டியை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
கருப்பு துணியை தானம் செய்வது நல்ல கர்மாவை பலப்படுத்துவதாக அமையும். இது உங்களை நோக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க செய்கின்றது.
கராம்பு,மிளகு மற்றும் செடியில் இருந்து காய்ந்து கீழே விழுந்த துளசி இலைகள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எரித்து அந்த புகையை வீட்டில் பரவச்செய்யலாம்.அல்லது சாம்பிராணி தூபம் காட்டும் போது இதில் இந்த பொருட்களை போட்டு தூபம் காட்டலாம்.
இதனால் கண் திருஷ்டி காரணமாக ஏற்பட்ட எதிர்மறை சக்திகளின் தாக்கம் முற்றிலும் நீங்கும். உப்பை எடுத்து 7 முறை உங்கள் தலையை சுற்றி தண்ணீரில் கரைத்து விடுவதன் மூலமும் கண் திருஷ்டி நீங்கும்.
இவ்வாறு தலையை சுற்றும் போது கடிகாரத்தின் திசைக்கு எதிர் திசையில் சுற்றுதல் வேண்டும். உப்பு எதிர்மறை ஆற்றல்களை அழிக்கக்கூடிய பொருட்களுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.
கண் திருஷ்டியை போக்க வீட்டில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து இதில் ஒரு எலுச்சை பழத்தை போட்டு வைத்து விட்டால் இது அந்த இடத்தில் உள்ள அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் அழித்துவிடும். இதனால் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதக விளைவுகளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.