வெங்காயத் தோலில் இத்தனை நன்மைகளா..!! நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!
தினசரி சமையலில் பயன்படுத்தும் ஒன்றுதான் வெங்காயம். இந்நிலையில் வெங்காயம் பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்நிலையில் வெங்காயத் தோலில் பல நன்மைகள் இருக்கிறதாம். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தோலில் உண்டாகும் தேவையில்லாத அலர்ஜியை தவிர்க்க வெங்காய தோல்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து தினமும் காலையில் இந்த தண்ணீரில் முகத்தை கழுவவும். சில நாட்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால் உடனே வெங்காய தோலை பயன்படுத்துங்கள். இதற்கு வெங்காய தோலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்பு காலையில் இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம். முடியை அழகாக்க வெங்காயத்தோல் தண்ணீரையும் பயன்படுத்தலாம் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இது உங்கள் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுவதற்கு மிகவும் உதவும்.




