உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் தன்னுடைய வேலையை நோக்கி தான் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், உணவுக்கு ஏற்ற நேரம் தாண்டி கிடைக்கும் நேரத்தில் அதாவது இரவில் ஒரு மணிக்கு சாப்பிடுவது காலை சாப்பாட்டை காலையில் 11 மணிக்கு சாப்பிடுவது மதிய சாப்பாட்டை மாலை 5 மணிக்கு சாப்பிடுவது இந்த மாதிரி பலரும் சாப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் உணவு உண்ண சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
காலை உணவுக்கு ஏற்ற நேரம் காலை 7:00 மணி முதல் 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட வேண்டும். அதற்கு மீறினால் பத்து மணிக்குள் ஆவது காலை உணவை சாப்பிட வேண்டும். அதுவும் குறிப்பாக தூங்கி எழுந்த அரை மணி நேரத்திற்குள் காலை உணவு சாப்பிட வேண்டும்.
மதிய உணவுக்கு ஏற்ற நேரம் 12:30 முதல் 2 மணிக்குள் சாப்பிட வேண்டும். கண்டிப்பாக காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக இடைவெளி இருக்கக் கூடாது.
இரவு உணவுக்கு ஏற்ற நேரம் என்னவென்றால் ஆறு மணி முதல் 8:00 மணிக்குள் சாப்பிடுவது நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. குறிப்பாக தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவு அருந்துவது பல நன்மைகளை தரும்.




