
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!
தினசரி நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் வெந்தயம். வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. வெந்தயம் சமையலுக்கு ருசியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். என் நிலையில் வெந்தயத்தால் என்னென்ன நோய்கள் சரியாகும் மற்றும் வெந்தயத்தின் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 200 மில்லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைக்க வேண்டும். இரவு முழுவதும் அது நன்றாக ஊறியதும் காலையில் எழுதும் பிரஸ் செய்துவிட்டு தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிட்டு பின் அந்த தண்ணீரையும் குடிப்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இப்படி வெந்தயத்தையும் தண்ணீரையும் சாப்பிடுவதால் உடல் சூடு உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் அந்த பிரச்சனை சரியாகும். அது மட்டும் இன்றி அஜீரணக் கோளாறுகள் போன்றவை கூட சரியாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்து அதை ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும். வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயத்தில் இந்த பொடியை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்க வயிற்றுப்போக்கு சரியாகும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் ஒரு சிறந்த பொருளாக பயன்படுகிறது. குறிப்பாக தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி குடிப்பதன் மூலம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.