பிடிக்காத நபரை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளாதீர்கள்..!! உண்மையான பதிவு..!! படித்ததில் பதிவு செய்தது..!!

பிடிக்காத நபரை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளாதீர்கள்.

 

#வாழ்க்கை துணை அல்லது காதலி இருவரையும் கவனமாக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையின் 90 சதவீதம் மகிழ்ச்சியோ துக்கமோ அது இவரிடமிருந்து தான் வரும்.

 

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள்.

 

கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்.

 

சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும். அதுவும் பலமாக இருக்கட்டும்.

 

எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள். பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடியுங்கள்.

 

உங்களுக்கு யார் என்று தெரியாத நபருக்கு உதவி செய்யுங்கள்.

 

உங்கள் புத்தகங்களில் நீங்கள் விரும்பாத புத்தகங்களை மட்டும் கடனாக கொடுங்கள்.

 

குழந்தைகளோடு விளையாடும் பொழுது, அவர்களை வெற்றி பெற விடுங்கள்.

 

இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம். எனவே எப்பொழுதும் விளையாட்டு தனமாக இருங்கள்.

 

எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்க படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன.

 

இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றிருக்கும் நபரோடு மோதாதீர்கள்.

 

நீங்கள் விரும்பும் நபரை எவ்வளவு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து விடுங்கள்.

 

நண்பர்களோ உறவினர்களோ மருத்துவமனையில் இருந்தால், அங்கே சென்று நலம் விசாரியுங்கள்.

 

அவ்வப்பொழுது அதிகம் பயணிக்காத சாலையில் பயணம் செய்யுங்கள்.

 

தூங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றும் அந்த யோசனை படுக்கையில் இருக்கும் பொழுது தான் வரும்.

 

வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும், டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும் ஒரு வணக்கத்தை தெரிவியுங்கள்.

 

குழந்தைகள் போகும் பள்ளிப் பேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள். ஒரு சிறு குழந்தையைப் பார்த்தால் சிரிக்க மறக்காதீர்கள்.

 

வாழ்க்கையை நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள். வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் மர்மம் தான்.

 

எப்பொழுதும் ஆபத்தை எதிர் நோக்கியே இருங்கள். ஆபத்திலேயே வாழுங்கள்………..

Read Previous

இது உங்கள் வாழ்க்கை.. அதை நீங்க தான் வாழணும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular