தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராய் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் பாடலாசிரியர் இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்டவராய் திகழ்ந்து வருகிறார். இவர் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி அதில் தாவே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு “ராயன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுசு உடன் எஸ். ஜே சூர்யா. செல்வ ராகவன். பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் ,சுதீப் கிஷன், விஜயன் ஆகிய பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உள்ளனர்.
திரைப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்தது ,இதனை தொடர்ந்து கடந்த மே 9ஆம் தேதி “ராயன்” படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய “அடங்காத அசுரன்” என்கின்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து கேங் ஸ்டார் கதைகளத்தில் உருவாகியுள்ள “ராயன்” படத்தில் மூன்றாவது பாடல் இன்று வெளியாக உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி “ராயன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.