நாம் பயன்படுத்தும் குடிநீருக்கும் காலாவதி தேதி உள்ளது..
நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல நமது உடலும் தான், மனித உடலானது 70% நீரால் நிரம்பியுள்ளது, சுத்தமான நீரை வருவதால் நமது உடல் முழு ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்ளும், வெப்பநிலையை சீராக இயக்க உடலின் கழிவுகளை வெளியேற்ற நீர் பெரிதும் உதவுகிறது, மழை மூலமாக நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் கிடைக்கப்படும் தண்ணீர் சுத்தப்படுத்துவதற்கு குளோரின் அல்லது ஓசோனைஸ் செய்யப்படுகிறது, பொதுவாக தண்ணீருக்கு காலாவதியே கிடையாது அது எப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம், மினரல் வாட்டர் இவற்றில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றனர் இதில் காலாவதியாக நாட்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர், பிளாஸ்டிக் பாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் உடலுக்கு கேடு தரும் முடிந்தவரை தண்ணீர் பாட்டில் வாங்கும் பொழுது தேதி பார்த்து வாங்க வேண்டும் இல்லையென்றால் உடல் ஆரோக்கியம் பாதித்து ஒவ்வாமை தன்மை உண்டு பண்ணும்..!!