தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் பிரியங்கா அருள்மோகன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக இருந்து வருகின்றார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் முதலில் 2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் பிரபல நடிகரான நானி ஜோடியாக கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் அந்தஸ்து பெற்றார். தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் அவருக்கு தேடிச்சென்றன.
நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே நடிப்பில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது. இதனால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது பிரதர் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ஸ்லீவ் பிளஸ் சேலையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
View this post on Instagram