ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்குகிறது.
உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.325 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
உலகக் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றனர்.




