மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, சுப்பன் என்ற முதியவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ராமர் (26), லட்சுமண் (26) மற்றும் பிரவீன் (34) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றச்சாட்டின் அடிப்படையில் மூவரையும் அதிரடியாக கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கிராமங்களில் அமைதியைக் குலைக்கும் வகையிலும், சாதி மோதல்களைத் தூண்டும் விதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




