அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர். சூரியபிரபா தவெகவில் இணைந்தார்..!!

சென்னை புறநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக இருந்த பள்ளிக்கரணை சி.ஆர். சூரியபிரபா, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.

இன்று (ஜூலை 19) நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான இ.சி.ஆர். பி. சரவணன் முன்னிலையில் சி.ஆர். சூரியபிரபா கட்சியில் இணைந்தார்.

அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்த அவர், தற்போது தவெகவில் இணைந்திருப்பது அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது வருகை, சென்னை புறநகர் பகுதியில் தவெகவின் அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Read Previous

அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலை நியமனம்..!!

Read Next

“புதிதாக வருபவர்களுக்கு உடனடி பதவி இல்லை”.. விஜய் கறார் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular