“புதிதாக வருபவர்களுக்கு உடனடி பதவி இல்லை”.. விஜய் கறார் உத்தரவு..!!

அதிமுகவில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் தவெக சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சியின் அமைப்பு ரீதியான வளர்ச்சி வேகமெடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், புதிதாக கட்சியில் இணையும் நபர்கள் உடனடியாக பதவிகள் அல்லது முக்கிய பொறுப்புகளை எதிர்பார்க்கக் கூடாது என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் ஆரம்ப கட்ட கட்டமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உழைப்பு மற்றும் கட்சிப் பணியின் அடிப்படையிலேயே பொறுப்புகள் வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர். சூரியபிரபா தவெகவில் இணைந்தார்..!!

Read Next

“ரீல்ஸ் மூலம் விஜய் பிம்பம் மட்டுமே கட்டமைப்பு” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular