அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலையை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. கட்சியின் அமைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எழுமலை, கடந்த 2021ஆம் ஆண்டு கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




