கரூர் விவகாரத்தை தொடர்ந்து, அறிவிக்கப்படாத கூட்டணியாக தவெக அதிமுக செயல்பட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவுக்கு எதிராகச் செயல்படுவதுதான் விஜய்யின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதை பாஜக சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே நடுவண் பாலமாக இருந்து, இருவரையும் ஒரே பாதையில் இழுத்துச் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.




