கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பாக காங்., கட்சி எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கான நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.




