அமைச்சர் சகோதரர் மீதான தாக்குதல் வழக்கு: நீதிபதி பணியிட மாற்றம்!

 

 

நிதியமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி சேரலாதன், மாஹேவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

 

சொத்துத் தகராறு தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவியை அமைச்சர் மரிய வில்சன் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சேரலாதனின் பணியிட மாற்றம் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

தூத்துக்குடியில் பரபரப்பு: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

Read Next

அரசு கேபிள் டிவி சேவை முடங்குமா? 12 லட்சம் சந்தாதாரர்களுக்கு சிக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular