தூத்துக்குடியில் பரபரப்பு: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

 

 

தூத்துக்குடியில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வெடிக்கச் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அலெக்ஸ் (22), பிரகாஷ் (23), குரு (21) ஆகிய நண்பர்கள், அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம்!

Read Next

அமைச்சர் சகோதரர் மீதான தாக்குதல் வழக்கு: நீதிபதி பணியிட மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular