மாணவர்கள் போராட்டம் தொடர்பான சர்ச்சை சுற்றறிக்கை வாபஸ்! அமைச்சர் விளக்கம்!

 

 

தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தொடர்பாக உயர்கல்வித்துறை நேற்று (ஆக.19) வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து, எம்எல்ஏ மாரிமுத்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், கல்லூரிகளில் ஒழுங்கு மற்றும் அமைதியை பராமரிப்பது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

 

அந்த சுற்றறிக்கையில் ஒரு வார்த்தை தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இதன் காரணமாக அந்த சுற்றறிக்கை உடனடியாக வாபஸ் பெறப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

 

மேலும், மாணவர்களின் கல்விச் சூழலில் ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாப்பதே சுற்றறிக்கையின் நோக்கம் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழக விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு விவாதம்!

Read Next

“பிரபல இயக்குநர் சீட் கேட்டார்; விஜய் மறுத்துவிட்டார்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular