சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரனின் உடலை, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் தமிழக மீனவரின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மீனவர் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், சவுதி அரேபியாவில் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.




