தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆனந்த், முதலமைச்சர் விஜயை இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.
ஆனால், குறிப்பிட்ட தொகுதியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மக்கள் இயக்க நிர்வாகிக்கே தேர்தலில் போட்டியிட முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறி, அந்த இயக்குநரின் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் மறுத்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் குறிப்பிட்ட தொகுதி கோவை கிணத்துக்கடவு என்றும், விஜயின் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் சீட் கேட்டதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது அந்த தொகுதியில் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அமைச்சர் விக்னேஷ் எம்எல்ஏவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், அமைச்சர் ஆனந்த் தனது பேச்சில் இயக்குநரின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




