உறவுகளத்தனையும்
அறுந்தாலும்
தாயுறவு
உடனிருக்கும்
அவளால்
எதுவும்
செய்ய
இயலாது
போனாலும்
எதையாவது
செய்து மகிழும்
நீ
கெட்டதே
செய்தாலும்
நல்லதே
செய்யும்
மனம்
தந்தையே
வந்து
சொன்னாலும்
துளியும்
சந்தேகம்
கொள்ளாத
உறவது
எங்கும்
எதற்காகவும்
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காத
பாசம்
அன்பு
பாசத்தின் வேர்
தாய்மையின்றி
வேறேது?
கருப்பு
வெள்ளை
சிவப்பு
என
பேதம்
பார்க்காது
தன்
வலியிலும்
பசியிலும்
இரை தேடி
உணவளிக்கும்
தன்
துன்பத்திலும்
கஷ்டத்திலும்
விருப்பத்தை
நிறைவேற்றி
மகிழும் ஜீவன்
தந்தை
அடித்தால்
தடுப்பதும்
காசு
கேட்டால்
தெரியாது
கொடுப்பதும்
இயல்பு
தாய்
என்பது
கணவனுக்கும்
மனைவிக்கும்
உயர்ந்தது
கண்ணீர்
கசிந்தால்
துடிக்கும்
முகம்
காணாவிட்டால்
வாசலையே
பார்க்கும்
ஒரு
பிள்ளையின்
பிறப்பும்
வளர்ப்பும்
மட்டுமின்றி
வெற்றியும்
தோல்வியும்
தாயையே
சேரும்!




